முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷீலா தீட்சித்திற்கு கோர்ட்டு 2-வது முறையாக அபராதம்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.1 - பாஜக மூத்த தலைவர் விஜேந்திர குப்தாவுக்கு எதிராக தான் தொடுத்த அவமதிப்பு வழக்கு ஒன்றில், நீதிமன்றத்தில் ஆஜராகததால் கேரள முன்னாள் கவர்னர் ஷீலா தீட்சித்துக்கு டெல்லி நீதிமன்றம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது.

கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி மாநகராட்சி தேர்தலின்போது, மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு சாத கமாக செயல்படுவதாக ஷீலா மீது குற்றம்சாட்டி பேசியுள்ளார் குப்தா. அப்போது தகாத வார்த்தையை தனக்கு எதிராக குப்தா பயன்படுத்தியதாகக் கூறி டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் ஷீலா.

இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி குப்தா மீது நீதிமன்றம் அவமதிப்பு குற்றச்சாட்டு பதிவு செய்தது. இதுதொடர்பாக விசாரிப்பதற்கு சனிக்கிழமை நேரில் ஆஜராகுமாறு ஷீலா தீட்சித்துக்கு மாஜிஸ்திரேட் நேஹா உத்தரவிட்டிருந்தார். ஆனால் நேரில் ஆஜராகாததால் ஷீலாவுக்கு நீதிமன்றம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது.

இதில் ரூ.2 லட்சத்தை டெல்லி மாநில சட்ட சேவைகள் ஆணையத்தில் (டிஎல்எஸ்ஏ) செலுத்துமாறும் ரூ.1 லட்சத்தை குப்தாவிடம் வழங்குமாறும் உத்தர விடப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், அன்றைய தினம் நேரில் ஆஜராகுமாறு ஷீலாவுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே ஷீலா தீட்ஷித்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago