முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கியது

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.2 – தமிழ்நாட்டில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கப்பட்டன. 19 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியும் உள்ளன. இதில் 2555 எம்.பி.பி.எஸ். இடங்கள், 100 பி.டி.எஸ். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன.

சென்னை மருத்துவ கல்லூரி (எம்.எம்.சி.), கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி உள்ளிட்ட அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் புதிய மாணவர்கள் நேற்று உற்சாகமாக வந்தனர். முதல் நாள் என்பதால் சில மாணவ–மாணவிகள் கலக்கத்துடன் இருந்தனர். பெற்றோர்களுடன் வகுப்புகளுக்கு வந்த மாணவ–மாணவிகளை மூத்த மாணவர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். இனிப்பு கொடுத்தும் அழைத்து சென்றனர்.

சென்னை மருத்துவ கல்லூரியில் 265 எம்.பி. பி.எஸ். மாணவர்களும் ஸ்டான்லியில் 250 பேரும், கீழ்ப்பாக்கத்தில் 200 மாணவர்களும் நேற்று வகுப்புகளுக்கு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

மாணவர்களுக்கு எம்.எம்.சி. புதிய கட்டிடத்தில் அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கும் வகுப்பு நடந்தது. மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதா லட்சுமி கலந்து கொண்டு பேசினார். மாணவர்கள் கல்லூரியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், விடுதியில் எவ்வாறு எப்படி இருக்க வேண்டும். முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் பாடங்கள் என்னென்ன, எப்படி என்பது பற்றி எடுத்து கூறினார்.

பெற்றோர்களின் கஷ்டத்தை அறிந்து நன்றாக படிக்க வேண்டும். மிகச் சிறந்த மருத்துவ சேவை ஆற்றும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்து இருக்கிறது.

அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று அவர் அறிவுரை வழங்கினார்.

மருத்துவ மாணவர்களும் உடை கட்டுப்பாடு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது. அதன் படிதான் அனைத்து மருத்துவ கல்லூரியிலும் மாணவ–மாணவிகள் வகுப்பிற்கு செல்ல வேண்டும். ஜீன்ஸ் பேண்ட், டீ–சர்ட் அணியக் கூடாது.ராகிங் பற்றி புகார் தெரிவிக்க புகார் பெட்டி அனைத்து மருத்துவ கல்லூரியிலும் வைக்கப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்