முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுகவில் இருக்கும் இந்துக்கள் வெளியேற வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 2 - அனைத்து மத பண்டிகைகளிலும் கலந்து கொள்வது, வாழ்த்து சொல்வது போன்ற நடைமுறைகளை அரசியல் கட்சி தலைவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் கட்சிகளில் இருக்கும் சம்பந்தப்பட்ட மதங்களை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மு.க.ஸ்டாலின் இணையதளத்தில் அவரது பெயரில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து வெளியானது.

இந்த வாழ்த்து செய்தியை பார்த்த தி.மு.க.வினர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது. பலர் இணையதளத்தில் நன்றி தெரிவித்து கருத்தும் வெளியிட்டனர்.

இந்நிலையில் தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்து செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்று கூறப்பட்டது. இது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு பா.ஜனதா மற்றும் இந்து இயக்கங்களும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:–

இந்த சம்பவத்தின் மூலம் தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாம், கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவதை போல் நாகரீகம் கருதி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்தை பொறுத்துக் கொள்ளாமல் வாபஸ் பெற்றது இந்துக்கள் மீதான வன்மமான போக்கையே காட்டுகிறது. இதன் மூலம் இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டனர். இந்த விரோத மனப்பான்மையை உணர்ந்து தி.மு.க.வில் இருக்கும் இந்துக்கள் அனைவரும் வெளியேற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கூறியதாவது:–

எந்த ஒரு இனம், மொழி, மதத்தை சேர்ந்தவர்களுக்கும், அவர்களது பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது நாகரீக சமுதாயத்தில் ஆரோக்கியமான சிறப்பான விசயம்.

விநாயகர் சதுர்த்திக்கு வெளியிடப்பட்ட வாழ்த்தை திரும்பப் பெற்றதன் மூலம் தி.மு.க. இந்து எதிர்ப்பில் உறுதியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

அத்தனை தலைவர்களின் வீடுகளிலும் பூஜை அறையும் உள்ளது. சாமி படங்களும் உள்ளது. கோவில்களில் அன்னதானம் முதல் அத்தனை திருப்பணிகளையும் செய்கிறார்கள். அப்படி இருந்தும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை திரும்ப பெற்றது, ‘இத்தனை நாட்களாக மக்களிடம் காட்டி வந்த இந்து வெறுப்பு உணர்வை தொடர்ந்து கடைபிடிப்பதாக வெளிக்காட்டும் முயற்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago