முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சுந்தரேசுவரருக்கு இன்று பட்டாபிஷேகம்

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, செப்.2 - மதுரையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆவணி மூலத் திறுவிழாவின் முக்கிய நிகழ்வாக சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

இத்திருக்கோயில் ஆவணி மூலத் திருவிழா ஆகஸ்ட் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 26-ஆம் தேதி வரை திருக்கோயில் வளாகத்திற்குள் சுந்தரேசுவரர் புறப்பாடு நடைபெற்றது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் அருள்மிகு சுந்தரேசுவரரின் திருவிளையைடல் லீலை நிகழ்ச்சியும், ஆவணி மூலவீதிகளில் சுவாமி, அம்மன் புறப்பாடு நடைபெற்றுவருகிறது. கோயிலுக்குள் கருப்பன பிள்ளை மண்டபத்தில் தங்கச்சப்பரத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினார்.

பின்னர் அடியாருக்கு அள்ள அள்ளக்குறையாத நெல்மணிகள் வழங்கும் லீலையான உலவாக்கோட்டை அருளிய நிகழ்ச்சியை சிவாச்சாரியார்கள் நிகழ்த்தி காட்டினர். அப்போது சுவாமி, அம்மன் முன்பு பயிர்களுடன் நெல்மணிகள் நிரம்பிய பொட்டலம் வைக்கப்பட்டிருந்தது. அதை அடியார்க்கு வழங்கும் பூஜைகள் நடைபெற்றன. இரவில் ஆவணி மூலவீதிகளில் சுவாமி, பிரியா விடையுடன் நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்மன் யாழி வாகனத்திலும் உலாவந்தனர்.

நேற்று காலை பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை நடைபெற்றது. மாலையில் சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் யானை மஹாலுக்கு முன்பு எழுந்தருளினர். அங்கு அருள்மிகு திருஞானசம்பந்தர் சைவசமயத்தை நிலைநிறுத்திய வரலாற்று லீலையை ஓதுவார்கள் பாடினர். பின் ஆவணி மூலவீதிகளில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். இன்று காலை மேலமாசி வீதியில் உள்ள இம்மையில் நன்மை திருவார் கோயிலில் வளையல் விற்ற லீலை நடைபெறுகிறது. மாலையில் தங்கப்பல்லக்கில் சுவாமி, அம்மன் எழுந்தருளி திருக்கோயில் திரும்புவர். அதன்பின் இரவு 7.30 மணி முதல் 7.54 மணிக்குள் அருள்மிகு சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

பட்டாபிஷேகத்தின் போது சுவாமியிடமிருந்து திருக்கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் செங்கோலைப் பெற்று சகலவிருதுகளுடன் சுவாமி சன்னதி 2-ஆம் பிரகாரம் வலம் வந்து பின் மீண்டும் அருள்மிகு சுந்தரேசுவரரிடம் ஒப்படைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்