முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா கவர்னராக மிருதுளா சின்ஙா பதவியேற்பு

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

பனாஜி, செப்.02 - எழுத்தாளரும், பாஜ மூத்த தலைவருமான மிருதுளா சின்ஹா, கோவா மாநில முதல் பெண் கவர்னராக பதவியேற்றுக் கொண்டார்.

பனாஜியில் கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதி மோஹித் ஷா, மிருதுளா சின்ஹாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் மனோகர் பாரிக்கர், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் கவர்னர் மிருதுளா சின்ஹா கூறுகையில், இலங்கை அரசர் ராவணனின் மனைவி மண்டோதரியின் வாழ்க்கை வரலாற்ரை சித்திரிக்கும் வகையில் தாம் எழுதிய மண்டோதரி என்ற நாவல் விரைவில் வரவிருக்கிறது என்று தெரிவித்தார். பாஜ மகளிரணி முன்னாள் தலைவரான மருதுளா சின்ஹா, பிகாரின் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள சாப்ரா கிராமத்தில் 1942-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி பிறந்தார். இளநிலை கல்வியியல் உளவியலில் முதுகலை, பட்டங்களை பெற்ற அவர், மோதிஹாரியில் பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கினார்.

புதுமையான ஹிந்தி எழுத்தாளராக திகழும் மிருதுளா சின்ஹா, 46 புத்தகங்களை எவுதியுள்ளார். பல்வேறு பத்திரி்ககைகளிலும் கட்டுரைகல் எழுதிவந்துள்ளார். மத்திய சமூக நல வீரியத் தலைவராகவும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திலும் பணியாற்றிய அனுபவம் மிருதுளா சின்ஹா ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்