முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - சீனா வர்த்தக அமைச்சர்கள் இன்று சந்திப்பு

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், செப்.02 - சீன அதிபர் ஜீ ஜின்பிங் செப்டம்பர் மாதம் இந்தியா வரவுள்ள நிலையில், இந்தியா - சீனா வர்த்தகத் துறை அமைச்சர்கள் இன்று சீனாவில் சந்தித்துப் பேசவுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகல் கூறுயதாவது: அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் சீன வர்த்தகத்துறை அமைச்சர் காவ் ஹசெங் தலைமையில் இந்தியா - சீனா வர்த்தகக் கூட்டுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரு அமைச்சர்களும் சந்தித்துப் பேசுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்தியாவில், சீனா மேற்கொள்ள உத்தேசித்துள்ள பல கோடி டாலர்கள் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவர். இரு நாடுகளுக்குமிடையில் நிலவி வரும் வர்த்தகப் பற்றாக்குறை குறித்து இந்தியாவின் கவலை குறித்து அந்தப் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, நிர்மலா சீதாராமன் சீனா செல்வது இது இரண்டாவது முறை. ஏற்கெனவே, குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கடந்த ஜூன் மாதம் சீனா சென்றபோது, நிர்மலா சீதாராமன் அவருடன் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்