முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு வழக்கு: நேரில் ஆஜராக நித்யானந்தாவுக்கு விலக்கு

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, செப்.3 - நித்யானந்தாவுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராக விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் வீரகணேஷ் நகரைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத் என்பவர் கடந்த 2011-ஆம் ஆண்டு என் மீது கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் செப்டம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கடந்த மாதம் 28-ஆம் தேதி கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் நேரில் ஆஜாரவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என நித்யானந்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி கே.பி.கே.வாசுகி முன்பு செவ்வாய்க்கிழமை (செப். 2) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்கள் ஜி.பாலா, டெய்சி ஆஜராகி, மனுதாரர் எந்தத் தவறும் செய்யவில்லை.

அதற்கான எந்த ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை ஆதாரமாக எடுக்க முடியாது என வாதாடினர்.

மனுவை விசாரி்த்த நீதிபதி, கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நித்யானந்தாவுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்