முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்த ஜனாதிபதியிடம் பரிந்துரை

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப்.03 - டெல்லி மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அதனால் அங்கு எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதனால் டெல்லியில் மீண்டும் தேர்தல் பற்றிய பரிந்துரை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கவர்னர் அறிக்கை விடுத்துள்ளார்.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜ 31, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றனர்.இதனால் ஆட்சி அமைக்க தேவையான 35 இடங்கள் கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைத்தார். ஆனால் அவர் திடீரென முதல் மந்திரி பதவியில் இருந்து விலகியதால் டெல்லி சட்டசபை முடக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

டெல்லி சட்டசபையை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி வலியுறுத்தி வருகிறது. இதற்காக அந்த கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக டெல்லி அரசியல் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க கவர்னர் நஜீப் ஜங் தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக அவர் இந்ச வாரம் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜிக்கு பரிந்துரை கடிதம் எழுத உள்ளார். அந்த கடிதத்தில் அவர் ஒன்று அதிக எம்.எஸ்.ஏ.க்கள் கொண்ட கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அல்லது மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதி உத்தரவு வெளியிடுவார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டெல்லி சட்டசபையில் ஆட்சி அமைக்க பாஜகவை அழைக்கும்படி அறிவுறுத்தக்கூடும் என்று தெரிகிறது. அப்படி அவர் அறிவுறுத்தினால் கவர்னர் நஜீப் ஜங் பாஜகவை ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுப்பார். ஆனால் இந்த அழைப்பை பாஜக ஏற்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் டெல்லி சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த ஹர்ஷ்வர்தன், ரமேஷ்பிதுரி, பர்மேஸ்வர்மா ஆகிய 3 பேரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.க்கள் ஆகிவிட்டனர்.

இதனால் பாஜ எம்எல்ஏக்கள் பலம் 31-ல் இருந்து 28-ஆக குறைந்து விட்டது. ஒரு வேளை மத்திய அரசு தற்போது டெல்லியில் ஆட்சி அமைக்க விரும்பி மந்திரி சபை முலம் ஒப்புதல் வழங்கினால் தற்போதைய டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயா புதிய ஆட்சியை அமைக்க வாய்ப்புள்ளது. ஆனால் பாஜவுக்கு 28 எம்எல்ஏக்களே இருப்பதால் பெரும்பாலான பாஜ மூத்த தலைவர்கள் மீண்டும் தேர்தலை சந்திக்கவே ஆர்வமாக உள்ளனர். எனவே பாஜ ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபடாது என்பது உறுதியாகியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் டெல்லி சட்டசபைக்கு மறுதேர்தல் நடத்தும் உத்தரவு வெளியிடப்படும். அனேகமாக ஜனவரி மாதம் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்தும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்