முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்யானந்தா ஆண்மை பரிசோதனைக்கு உட்பட உத்தரவு

புதன்கிழமை, 3 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

புது டெல்லி, செப்.04 - நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், அவர் ஆண்மை பரிசோதனைக்கு கண்டிப்பாக உட்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தா மீது கடந்த 2010-ஆம் ஆண்டு தொடரப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தும்படி கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஆண்மை பரிசோதனைக்கு தடை கோரி நித்யானந்தா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபது ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆண்மை பரிசோதனைக்கு தடை கோரிய நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்ததோடு உச்ச நீதிமன்றம் அவர் ஆண்மை பரிசோதனைக்கு கண்டிப்பாக உட்பட வேண்டும் என உத்தரவிட்டனர். கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா ஆண்மை பரிசோதனைக்கு உட்பட தயக்கம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

நித்யானந்தா தரப்பில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் ஆஜராகி, "இந்த வழக்கு தொடரப்பட்டபோதே, நித்யானந்தா கைது செய்யப்பட்டு அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது வேண்டுமென்றே மீண்டும் ஆண்மை பரிசோதனை செய்கின்றனர். இது தனிமனித சுதந்திரத்தில் அத்துமீறும் செயல். அதுவும் இத்தனை ஆண்டுகள் கழித்து சோதனை நடத்த சட்டத்தில் இடமில்லை" என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், "அப்படி பார்த்தால், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் யாருக்கும் சோதனை நடத்த முடியாதே?" என்று கேள்வி எழுப்பினர். மேலும், நித்யானந்தா மீதான வழக்கில் 2010-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, இத்தனை ஆண்டுகளாக விசாரணைக்கு உட்படுத்தப்படாமல் வழக்கு நிலுவையில் இருப்பதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்