முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, செப்7:விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது..

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த மாதம் 29–ந்தேதி கொண்டாடப்பட்டது.சென்னையிலும் அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. இந்த சிலைகளுக்கு தினமும் பூஜைகள் செய்யப்பட்டன. இந்து அமைப்புகள் மட்டுமின்றி பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்களும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர் அந்தந்த பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் 2 நாட்கள் பூஜை முடிந்ததும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

இந்நிலையில் 8 இந்து அமைப்புகள் சார்பில் நேற்று 4 இடங்களில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. இந்து மக்கள் கட்சி (அர்ஜுன் சம்பத்) இந்து மக்கள் கட்சி (எஸ்.வி.ஸ்ரீதரன்), இந்து மக்கள் கட்சி (எஸ்.ஆர்.குமரவேல்), பாரத் இந்து முன்னணி, சிவசேனா, தமிழக சிவசேனா, கணேஷ் மண்டல், கணேஷ் மகாதேவ் மண்டல் ஆகிய அமைப்புகள் சார்பில் ஊர்வலம் நடந்தது. இந்த அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்ட்ட ஆயிரக்கணக்கான சிலைகள் மினி லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது...

நுங்கம்பாக்கம், வள்ளூவர் கோட்டம், திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டை, தி.நகர் முத்துசாமி பாலம் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு செல்லப்படும் சிலைகள் பட்டினப்பாக்கம் கடற்கரையிலும், மேடவாக்கம் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக செல்லும் சிலைகள் நீலாங்கரை பல்கலை நகரிலும் கடலில் கரைக்கப்பட்டது...

இந்து முன்னணி சார்பில் ராமகோபாலன் பங்கேற்கும் ஊர்வலம் இன்று (7–ந்தேதி) திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்து புறப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி, நேற்றும் , சென்னை மாநகரில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கமிஷனர் அலுவலகத்தில் இருந்தபடியே நேரடியாக அதிகாரிகள் பார்ப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக 10 இடங்களில் இருந்து நவீன கேமராக்கள் மூலம் விநாயகர் ஊர்வலம் படம் பிடிக்கப்பட்டு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பதட்டமானவையாக கண்டறியப்பட்ட எழும்பூர், திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை, கோடம்பாக்கம், வேளச்சேரி, கே.கே.நகர், புளியந்தோப்பு, தாம்பரம், சேலையூர் ஆகிய 9 இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்