முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி: சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா பதிலளிக்க திடீர் உத்தரவு

திங்கட்கிழமை, 8 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.9 - 2ஜி வழக்கில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை செப்டம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை வழக்கு விசாரணை நடவடிக்கைகளையும், அது தொடர்பாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையையும் உச்ச நீதிமன்றம் மேற்பார்வையிட்டு வருகிறது.

இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் விவகாரம், விசாரணை அதிகாரிகளை இடமாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா ஈடுபடுவதாக சமூக ஆர்வலரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் புகார் தெரிவித்தார். சி.பி.ஐ.எல். என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "2ஜி வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், மற்றும் சி.பி.ஐ.எல். தொண்டு நிறுவனங்களின் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்.

குற்றச்சாட்டு கடுமையானதாக இருப்பதால், பதிலளிக்க மாட்டேன் என சின்ஹா மறுக்க முடியாது. இந்த சர்ச்சை தொடர்பாக சொல்ல நினைப்பதை ரஞ்சித் சின்ஹா எழுத்துப்பூர்வமாகவே அளிக்க வேண்டும்" என தெரிவித்தது.

நேற்று நடந்த வழக்கு விசாரணையில்போது, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை ரஞ்சித் சின்ஹா தனது வீட்டில் சந்தித்ததற்கு ஆதாரமாக விளங்கும் அவரது வீட்டின் வருகைப் பதிவேட்டை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த கோப்புகள், பிரசாந்த் பூஷனுக்கு எப்படி கிடைத்தது என ரஞ்சித் சின்ஹா நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரசாந்த் பூஷன், 'நேற்றிரவு அடையாளம் தெரியாத சிலர் என்னிடம் இந்த கோப்புகளை அளித்தனர்' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்