முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை

திங்கட்கிழமை, 8 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable


பெங்களூர்,. செப்.09 - சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி கர்நாடகாவில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடைபெற்றது. கர்நாயக மாநிலம் பிடிதி ஆசிரம் மடாதிபதி நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நித்யானந்தா விடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக சிபிஐ போலீசார் முடிவு செய்தனர். இதனை எதிர்த்து நித்யானந்தா பெங்களூர் ஐகோர்ட்டில் வழக்குதொடர்ன்தார். அவரது மனுவை திள்ளுபடி செய்த ஐகோர்ட்டு ஆகஸ்டு மாதம் 6-ஆம் தேதி ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவு விட்டது.
இந்த சோதனக்கு தடை கோரி நித்யானந்தா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. ஆனால் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நித்யானந்தா கோரிக்கையை நிராகரித்தது. பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவ மனையில் ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவுப்பிறப்பித்தது.
அதன்படி ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்த சீடர்களுடன் நித்தியானந்தா நேற்று காலை 8 மணிக்கு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு வந்தார். நித்யானந்தா காவி உடை அணிந்திருந்தார். அவருடன் வந்த பெண் சீடர்கள் வெள்ளை சேலையும், ஆண் சீடர்கள் காவி உடையும் அணிந்து இருந்தனர். சோதனைக்காக காலையில் நித்யானநஅதா உணவு எதுவும் உட்கொள்ளவில்லை.
ஆஸ்பத்திரியில் அவருக்கு 4 டாக்டர்கள் கொண்ட குழு மருத்துவ சோதனை நடத்தியது. பொது மருத்துவர் நியூராலஜி, உளவியல், தடயவியல் துறை நிபுணர்கள் நடத்திய இந்த மருத்துவ சோதனையை மருத்துவமனை தலைவர் தீர்க்கண்மா மேற்பார்வையிட்டார். ஆண்மை சோதனை முடிந்ததும் மபுவாளாவில் உள்ள தடயவியல் ஆய்வு கூடத்துக்கு நித்யானந்தா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு குரல் சோதனை நடந்தது.
நித்யானந்தாவுக்கு ஆண் குரலா?  பெண் குரலா என்பது கண்டறியப்பட்டது. போனில் மிரட்டியதாக நித்யானந்தா மீது போலீசில் ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. இந்த வழக்கின் ஆதாரத்துக்காக இந்த குரல் சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago