முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை இந்தியன்ஸ் லாகூர் அணியுடன் இன்று மோதல்

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

ராய்ப்பூர், செப் 13:

6வது சாம்பியன்ஸ் லீக் ஓவர் போட்டி வருகிற 17ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் உட்பட 8 அணிகள் முதன்மை சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றன. இன்னும் 2 அணிகள் தகுதி சுற்று ஆட்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.

இதில் மும்பை இந்தியன்ஸ், சதர்ன்ஸ் எக்ஸ்பிரஸ்(இலங்கை), நார்தன் டிஸ்டிரிக்ஸ்(நியூசிலாந்து) லாகூர் லயன்ஸ்(பாகிஸ்தான்) ஆகிய 4 அணிகள் விளையாடுகின்றன. முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் முதன்மை சுற்றுக்கு முன்னேறும் தகுதி சுற்று ஆட்டம் இன்று முதல் 16ம் தேதி வரை ராய்ப்பூரில் நடக்கிறது. இன்று நடக்கும் முதல் நாள் ஆட்டத்தில் நார்தன் டிஸ்டிரிக்ஸ், சதர்ன் எக்ஸ்பிரஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்சும், லாகூர் லயன்சும் பலப்பரிட்சை நடத்துகின்றன. வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்ட் தலைமையில் மும்பை அணிகளம் இறங்குகிறது. அந்த அணியில் மைக் ஹஸ்சி, கோரி ஆண்டர்சன், மலிங்கா, ஹர்பஜன்சிங், அம்பதிராயுடு, சிம்மன்ஸ், பிரக்ஜன் ஒஜா போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். ரோகித் சர்மா காயத்தால் விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவே.

பாகிஸ்தானை சேர்ந்த லாகூர் லயன்ஸ் அணிக்கு முகமது ஹபீஸ் கேப்டனாக இருக்கிறார். அந்த அணியில் உமர் அக்மல், வகாப் ரியாஸ், நசீர் ஜாம்ஷெட் போன்ற சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இதனால் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். மும்பை அணியில் சர்வதேச போட்டியில் கலக்கிய நட்சத்திர வீரர்களுடன் களம் இறங்குவதால் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். முதன்மை சுற்று போட்டி வருகிற 17ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்