முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி நெரிசலை சமாளிக்க விரைவில் சிறப்பு ரயிகள்

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 13 - தீபாவளி நெரிசலை சமாளிக்க விரைவில் சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 22–ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இது புதன்கிழமை வருவதால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களில் பலர் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை விடுப்பு எடுத்து, அக்டோபர் 17–ந் தேதியே(வெள்ளிக்கிழமை) சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று, தீபாவளி முடிந்ததும் சென்னை திரும்புவார்கள்.

இன்னும் பலர் தீபாவளிக்கு அடுத்து வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விடுப்பு எடுத்து விட்டு, ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்புவார்கள்.இதனால், அக்டோபர் 17–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களில் அனைத்து இடங்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஆண்டு தோறும் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன் தெற்கு ரெயில்வே தீபாவளி சிறப்பு ரெயில்களை இயக்குவது வழக்கம். இது சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

இந்த நிலையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரயில் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார். இது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க விரைவில் சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு இருக்கும் என்றார். ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கியதை நினைவு கூர்ந்த அவர், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருவாதகவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்