முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி சுடும் சங்க நிர்வாகிகள் - வீரர்கள் முதல்வருக்கு நன்றி

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 13 - முதல்வர் ஜெயலலிதா வை நேற்று தலைமைச் செயலகத்தில், சென்னை - ஊனமாஞ்சேரி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியைப் பெறுவதற்கான புதிய தடங்கள் அமைத்திடவும், கூடுதல் வசதிகளை ஏற்படுத்திடவும் உத்தரவிட்டமைக்காக, தமிழ்நாடு துப்பாக்கி சுடுவோர் சங்கத்தின் செயலாளர் ஆர். ரவி கிருஷ்ணன், கோயம்புத்தூர் துப்பாக்கி சுடுவோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, மதுரை துப்பாக்கி சுடுவோர் சங்கத்தின் செயலாளர் எஸ்.வி.எஸ். வேல்சங்கர் மற்றும் துப்பாக்கி சுடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றிடும் வகையில், துப்பாக்கி சுடும் பயிற்சியைப் பெறுவதற்கான கூடுதல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக 28.8.2014 அன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 18 கோடி ரூபாய் செலவில் 10 மீட்டர் சுடுதளத்தில் 90 தடங்கள்,

25 மீட்டர் சுடுதளத்தில் 60 தடங்கள், 50 மீட்டர் சுடுதளத்தில் 90 தடங்கள் என

240 தடங்கள்; இறுதிப் போட்டிக்காக 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடுதளங்கள் ஒவ்வொன்றிலும் 10 தடங்கள்; சுடுதளத்திற்கான கட்டடங்கள்; 16 கோடி ரூபாய் செலவில் மின்னணு வசதிகளுடன் கூடிய ஸ்கோர் போர்டு உட்பட உலகத்தரம் வாய்ந்த நவீன துப்பாக்கி சுடுதல் போட்டிகளுக்குத் தேவையான உபகரணங்கள்;

2 கோடி ரூபாய் செலவில் டிராப் அன்ட் ஸ்கீட் (Trap and Skeet) தளத்திற்கான உபகரணங்கள் வாங்குதல்; கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகங்களில், தலா 2 கோடி ரூபாய் வீதம்

4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒவ்வொரு வளாகத்திலும் மின்னணு வசதிகளுடன் கூடிய 15 தடங்கள் கொண்ட துப்பாக்கி சுடும் தளங்கள்; என மொத்தம் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியைப் பெறுவதற்கான கூடுதல் வசதிகளை ஏற்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்கள்.

துப்பாக்கி சுடும் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்கள் வென்றிடவும், புதிய வீரர்களை உருவாக்கவும், தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திடவும் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியைப் பெறுவதற்கான புதிய தடங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்திட உத்தரவிட்டமைக்காக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு துப்பாக்கி சுடுவோர் சங்கத்தின் செயலாளர் ஆர். ரவி கிருஷ்ணன், கோயம்புத்தூர் துப்பாக்கி சுடுவோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, மதுரை துப்பாக்கி சுடுவோர் சங்கத்தின் செயலாளர்

எஸ்.வி.எஸ். வேல்சங்கர், துப்பாக்கி சுடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் - அசிலா கில்ஜி, வர்ஷா, சந்தியா, அசியா கில்ஜி,

மிதிலேஷ் பாபு, அஜய் நிதிஷ், சர்வேஷ் ஸ்வரூப் சங்கர், ஆதேஷ்

கே. செட்டி, வெங்கட்ராம், ஸ்ரீநிதி அபிராமி ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்து, முதல்வர் ஜெயலலிதாஅவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், ., தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, ., காவல் துறை தலைமை இயக்குநர் கே. ராமானுஜம், ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்