முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் 15-ல் பக்தர்கள் அறை டெபாசிட் உயர்வு

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, செப்.13 - திருப்பதியில் வரும் 15-ஆம் தேதி முதல் பக்தர்கள் தங்கும் அறைக்கு டெபாசிட் தொகை ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இவர்கள் திருமலையில் தங்கி சுவாமி தரிசனம் செய்ய இலவச அறகள் முதல், ரூ.50, ரூ.100, ரூ.150, ரூ.200, ரூ.500 உட்பட ரூ.7 ஆயிரம் வரை அறைகள் மறஅறும் விடுதிகள் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் இலவச தரிசனம் முதல் ரூ.200 வரை வாடகையில் உள்ள அறைகளுக்கு டெபாசிட் தொகையாக ரூ.350 வசூலிக்கப்பட்டு வந்தது. ரூ.500க்கு அதிகமாக உள்ள அறைகளுக்கு அதே அளவு பணத்தை முன்பணமாக வசூலித்து வருகிறது.

ஆனால் இலவசம் முதல் ரூ.200 வரை கட்டணம் உள்ள அறைகளை பெறும் பக்தர்கள் அதன் சாவிகளை தொலைத்து விட்டால் அல்லது தேவஸ்தான ஊழியர்களிடம் வழங்காமல் சென்றுவிட்டால், அந்த அறையின் பூட்டு உடைத்து, புதிய பூட்டு போட ரூ.500 வரை செலவாவதாகவும், இதில் முன்பணம் ரூ.350 போக மீதமுள்ள ரூ.150 தேவஸ்தான ஊழியர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சில ஊழியர்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து தேவஸ்தான உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதில் டெபாசிட் தொகையை ரூ.350ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் 15-ஆம் தேதி முதல் டெபாசிட் தொகை ரூ.500 வசூலிக்கப்படும் ன தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்