முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.7 லட்சமாக அதிகரிப்பு

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப். 14 – கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கான தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது அந்தத் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 758 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் உள்ள உறுப்பினர்களின் நலன் கருதி, தனிநபர் கடன் உச்சவரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், அந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான கடிதத்தை, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், அரசுக்கு அனுப்பி வைத்தார். அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் செயலாளர் எம்.பி.நிர்மலா அதற்கான உத்தரவை வெளியிட்டார்.

அதில், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் உள்ள உறுப்பினர்களின் தனிநபர் கடன் உச்சவரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தியும், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவ்வப்போது வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவார். அவற்றின் அடிப்படையில், தனிநபர் கடன்கள் அனைத்தும் சங்கங்களின் சொந்த நிதியில் இருந்து மேற்கொள்வதற்கு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று நிர்மலா வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்