முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டங்கள்: முதல்வர்

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 14 – அண்ணாவின் 106வது பிறந்தநாளையொட்டி வரும் 23–ந்தேதி முதல் 25–ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று முதல்வரும், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.பொதுக்கூட்டங்களில் பேசுவோர் யார், யார் என்ற பட்டியலையும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

பொதுக்கூட்டங்களில் அண்ணா தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், நடிகர்–நடிகைகள் பேசுகிறார்கள்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

அண்ணாவின் 106-–வது பிறந்த நாளை முன்னிட்டு, 23–ந்தேதி முதல் 25–ந்தேதி வரை மூன்று நாட்கள் ‘அண்ணாவின் 106-–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’ தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்ட செயலாளர்களும், மாவட்ட அண்ணா தி.மு.க. நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, அண்ணாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்