முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியிடம் கருத்து வேறுபாடு இல்லை: ராஜ்நாத் சிங்

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப்.14 - பிரதமர் நரேந்திர மோடியுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றும், தங்களுக்கு இடையே சமுக உறவு நிலவுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மோடி துடிப்புடன் செயல்படும் பிரதமர். அவரது அரசில், நான் உள்துறை அமைச்சராக இருக்கிறேன். எங்கள் இருவருக்கும் இடையே சுமுகமான உறவு உள்ளது. எதிர்காலத்திலும் சமுக உறவே நீடிக்கும் என்றார் ராஜ்நாத் சிங்.

காவல் துறை அதிகாரிகள் நியமனத்தில் ராஜ் நாத் சிங்கின் மகன் பங்கஜ் தலையிட்டு லஞ்சம் வாங்குவதாகவும், இதற்காக அவரை அழைத்து ராஜ் நாத் சிங் முன்னிலையில் பிரதமர் மோடி கண்டித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் தகவல் வெளியானது. இதற்கு மறுப்புத் தெரிவித்து பிரதமர் அலுவலம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago