முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில் திருவிழாவில் நடிகை ரோஜா மீது தாக்குதல்

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

திருமலை, செப்.14 - நடிகை ரோஜா மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரியில் கெங்கையம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு அந்த தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல் ஏ நடிகை ரோஜா கலந்து கொண்டார். ஆரத்தி காட்டுவதற்குகாக ரோஜா, சுவாமி அருகே சென்றபோது அங்கிருந்த தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சிலர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த இருதரப்பினரும் ஒருவரையொருவர் கையால் தாக்கி கொண்டனர். இதில் எம்எல்ஏ ரோஜாவின் வலது கையில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்த ரோஜாவின் பாதுகாவலர் அவரை மீட்டு பாதுகாப்பாக அழைத்து சென்றார்கள். இதுகுறித்து ரோஜா கூறியதாவது:

தேர்தலில் நான் வெற்றி பெற்றதால் தோல்வியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தெலுங்குதேசம் கட்சியினர் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். டிஎஸ்பி கிருஷ்ணகிஷோர், முன்னாள் அமைச்சர் முத்துகிருஷ்ண நாயுடு உத்தரவின்படியே என் மீது இந்த கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் தேர்தலிலும் இதேபோன்று ஆளும் கட்சியினர் வேண்டுமேன்றே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மீது தாக்குதல் நடத்தினர். சட்டப்பேரவையில் மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு சரியாக உளஅளதாக கூறிவரும் ஆளும் கட்சியினர், இது போன்று வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். கடந்த வாரம் திருப்பதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இது வரை நடவடிக்கையும் எ"ுக்காமல் அதை விபத்துபோல் போலீசார் விபத்துபோல் போலீசார் சித்தரிக்கின்றன.

சுவாமிக்கு ஆரத்தி காட்ட சென்ற என்னை தாக்கிவிட்டனர். ஆளுங்கட்சியினர் வந்தவுடன் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அங்கிருந்து பின்வாங்கி சென்றனர். டிஎஸ்பி கிருஷ்ணகிஷோர் உத்தரவுப்படியே போலீசார் வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்தனர். எனவே டிஎஸ்பி கிருஷ்ணகிஷோரை சஸ்பெண்டு செய்து என்மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என டிஐஜிக்கும், எஸ்பிக்கும் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago