முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்தர்கள் அனைவரும் சம்பிரதாய உடை அணிய வலியுறுத்தல்

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, செப்.14 - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதுவரை ஆர்ஜித சேவைகளான சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம் என அனைத்து ஆர்ஜித சேவைகளுக்கும் இந்துக்களின் சம்பிரதாய உடைகலான வேட்டி, சட்டையை ஆண்களும், பெண்கள் சேலை அணிந்து வர வேண்டும் என கட்டாயமாக இருந்து வருகிறது.

கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் ரூ.300க்கான சிற்பபு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இ-தரிசன கவுன்டர்கள் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் முன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட் பெற்று தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயமாக சம்பரதாய உடை அணிந்து வர வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்தது. இதே போல் 60 நாட்களுக்கு முன்பு முன் பதிவு செய்யக்கூடிய ரூ.50 சுதர்சன டிக்கெட் பெற்று வரும் பக்தர்களும் சம்பரதாய உடை அணிந்து வர வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆண்லைனில் டிக்கெட் பெற்று வந்த பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்த வரிசையில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ திடீர் ஆய்வு செய்தார். இதில் 40 சதவீதம் பக்தர்கள் சம்பரதாய உடை அணியாமல் பேன்ட்-சட்டை அணிந்து வந்திருந்தது தெரிந்தது. அவர்கள் அனைவரும் வேட்டி அணிந்து வரும்படி கூறி வரிசையில் இருந்து வெளியேற்றினர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வேட்டிக் கொண்டு வராத பக்தர்கள் என்ன செய்வது எனறு தெரியாமல் தவித்தனர். இந்நிலையில் தேவஸ்தானத்தின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் கடை வைத்திருந்த வியாபாரிகள் சிலர் வேட்டிகளை எடுத்து வந்து வரிசையில் நின்றவர்களிடம் விற்பனை செய்து அவர்கள் தொடர்ந்து தரிசனத்திற்கு செல்ல ஏற்பாடு செய்தனர்.

இது குறித்து இணை செயல் அலுவலர் கூறுகையில், திருப்பதியில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்த பக்தர்கள் அணைவரும் சம்பரதாய உடைகள் அணிந்து வர வேண்டும். இது கட்டாயம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago