முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.6 லட்சம் கோடி இந்தியாவில் முதலீடு செய்ய சீனா திட்டம்

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

மும்பை, செப்.14 - அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி இந்தியாவில் முதலீடு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்த தினமான வரும் 17-ஆம் தேதி அன்று தஜிகிஸ்தான், மாலத்தீவு, இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வரும் சீன அதிபர் முதலில் குஜராத்திற்கு வருகிறார். அவர் அடுத்த 5 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் திட்டத்துடன் இந்தியா வருவதாக மும்பையில் உள்ள சீன தூதர் லியு யூபா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சுற்றுப் பயணத்தின்போது அந்த நாடு இந்தியாவில் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஏற்பாடு செய்தார். அதுபோல் மூன்று மடங்கு அதாவது 6 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் திட்டத்துடன் எங்கள் அதிபர் இந்தியா வருகிறார். இந்தியாவில் தொழில் பூங்காக்கள் அமைக்கவும் ரயில்வேயை நவீனமயமாக்கவும் முதலீடு செய்யப்படும். நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி உணவு பதப்படுத்துதள், ஜவுளி தொழில் உள்ளிட்ட துறைகளிலும் முதலீடு மேற்கொள்ளப்படும். புனே மற்றும் காந்திநகரில் தொழில் பூங்காக்கள் அமைக்க 700 கோடி டாலர் ( ரூ.4,200 கோடி) முதலீடு செய்யப்படும்.

இதில் 3 ஆயிரம் கோடி ரூபாயில் 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புனேயில் தொழில் பூங்கா அமைக்கப்படும். வாகன உற்பத்திக்கான சிறப்பு தொழில் பூங்காவாக அமையும். இதில் ஒரு லட்சம் பேரு்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் ஜவுளித்தொழில் பூங்கா அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம். உணவு பதப்படுத்துதல் துறையில் ஒரு தொழில் பூங்கா அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துதல், இந்திய ரயில்வேயை நவீனப்படுத்துதல் திட்டங்களில் முதலீடு செய்ய சீன தொழிலதிபர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். முதல் புல்லட் ரயில் செயல்படுத்த ஜப்பானுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது இந்தியா. 2-வது புல்லட் ரயில் திட்டத்தை சீனா செயல்படுத்தும். மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் திட்டங்களை செய்லபடுத்த உள்ளோம்.

நதிகள் இணைப்பு மற்றும் சாலைகள், துறைமுகங்கள் மேம்பாட்டு திட்டங்களில் மேலும் 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 600 நீர்த்தேக்கங்கiளை தூர்வாரி விவசாயிகளுக்கு நீர்ப்பாசனத்தை மேம்படுத்தி தரும் திட்டமும் எங்களிடம் உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்