முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தை இறப்பு விபத்தை ஏற்படுத்துவோருக்கு 7 ஆண்டு சிறை

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப் 15 - குழந்தை இறப்புக்கு காரணமாகும் விபத்துக்களை ஏற்படுத்துவோருக்கு ரூ. 3 லட்சம் அபராதத்துடன் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட புதிய சாலை பாதுகாப்பு போக்குவரத்து மசோதா 2014 பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் சாலை விபத்துக்கள் நேரிடுகின்றன. இதில் 1.4 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய மசோதாவில் சாலை விதிகளை மீறுவோர் விபத்துக்களை ஏற்படுத்துவோருக்கு கடுமையான தண்டனை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் குடித்து விட்டு வாகனம் ஓட்டும் குற்றத்தை முதல் முறையாக செய்தால் அவருக்கு ரூ. 25 அபராதம் அல்லது 3 மாதங்களுக்கு குறையாமல் சிறை தண்டனையோ அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக வழங்குவதுடன் 6 மாத காலம் வரை ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். அதே குற்றத்தை அடுத்து 3 ஆண்டுகளில் அந்த நபர் 2வது முறையாக செய்தால் ரூ. 50 ஆயிரம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனையோ அல்லது 2 தண்டனைகளுடன் சேர்ந்து ஓராண்டு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். குழந்தை இறப்புக்கு காரணமாகும் விபத்துக்களை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு ரூ. 3 லட்சம் அபராதத்துடன் 7 ஆண்டுகளுக்்கு குறையாமல் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

பள்ளி வாகனங்களை ஓட்டுவோர், மது குடித்தது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ. 50 ஆயிரம் அபராதத்துடன் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அந்த ஓட்டுனரின் வயது 18ல் இருந்து 25 வரையிருந்தால் ஓட்டுனர் உரிமம் கூட ரத்து செய்யப்படும். சாலைகளில் இருக்கும் சிக்னல்களை 2 முறை மீறுவோருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதமும், ஒரு மாத காலத்துக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவோரின் உரிமம் ரத்து செய்யப்படும். பழுதடைந்த வாகனங்களை பயன்படுத்துவோருக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் அல்லது 6 மாதத்தில் இருந்து ஓராண்டு வரையான சிறை தண்டனை விதிக்கப்படும். அல்லது 2 தண்டனைகளும் சேர்த்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்