முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் மீண்டும் மழை: மீட்பு பணிகள் நிறுத்தம்

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், செப் 15:

காஷ்மீரில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் வரலாறு காணாத அளவுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். லட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரண பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. இந்த மழை வெள்ளத்தில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு சொத்துக்களும், தனியார் சொத்துக்களும் சேதமடைந்தன. சேதமடைந்த சாலைகளும் பாலங்களும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு வாரம் ஆகியும் இன்னும் பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் முழுமையாக மீட்கப்படவில்லை. ஒரு புறம் மீட்பு பணியும், மற்றொரு புறம் நிவாரண பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒரு வாரத்துக்கு பின் ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்கிறது. காலை 8.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழைஒரு மணி நேரம் விடாமல் கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளம் வடிந்த பகுதிகள் மீண்டும் வெள்ளக்காடானாது. மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மோசமான வானிலை நிலவுவதால் விமானப்படை ஹெலிகாப்டர்களின் மீட்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. மழை ஓய்ந்த இடங்களில் மட்டும் மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே காஷ்மீரில் தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்