முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்னிஸ் சங்கத்திலிருந்து கார்த்தி சிதம்பரம் நீக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், செப்.15 - அகில இந்திய டென்னிஸ் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து கார்த்தி சிதம்பரம் நீக்கப்பட்டார். அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் குழு கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இதில் 12 பேர் கொண்ட நிர்வாகக் குழுவுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் அரோரா புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் அகில இந்திய டென்னிஸ் சங்கத் தலைவர் அனில் கன்னா செய்தியாளர்களிடம் கறியதாவது:

இரண்டு வெவ்வேறு தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளில் நிர்வாகியாக இருப்பதற்கு அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் விதிகளில் இடமில்லை. கார்த்தி சிதம்பரம் டென்பின் பௌல் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார். இரு பதவிகளில் ஏதாவது ஒன்றை மட்டுமே தேர்வு செய்யுமாறு அவருக்கு வாய்ப்பளித்தோம். ஆனால், அவர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. டென்னிஸ் சங்கத்தின் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று கூடிய வருடாந்திரப் பொதுக்குழு முடிவு செய்தது.

அதனால், துணைத் தலைவர் பதவியிலிருந்து கார்த்தி சிதம்பரம் நீக்கப்பட்டுள்ளார் என்றார் அனில் கன்னா. துணைத் தலைவர் பதவி என்பது நிர்வாகப் பதவி இல்லையே என்று நிருபர்கள் கேட்டதற்கு, டென்னிஸ் சங்கத்தின் விதிகளைத்தான் நாங்கல் பின் பற்றுகிறோம் என்றார். பின்னர் அனில்கன்னா மேலும் கூறியதாவது:

டேவிஸ் கோப்பை, பெடரேஷன் கோப்பை, ஒலிம்பிக், ஆசியப் போட்டிகளில் பங்கேற்ற 2 வீரர்களை நிர்வாகக் குழுவில் 2 ஆண்டுகளுக்கு நியமிக்கும் வகையில் சங்க விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் டென்னிஸ் போட்டிகள் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதால், அந்த நாட்டின் சார்பில் 2 ஜூனியர் ஐடிஎஃப் போட்டிகள் இந்தியாவில் நவம்பரில் நடைபெறும். இதில் 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு நேரடி அனுமதி அளிக்கப்படும் என்றார்.

துணைத் தலைவர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது ஜனநாயக விரோதமானது என்றும், விதிமுறைகளுக்கு முரணானது என்று கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு துணைத் தலைவராக என்னை அழைத்து நீக்கிவிட்டனர். அகில இந்திய டென்னிஸ் சங்கத் துணைத் தலைவருக்கு நிர்வாகரீதியான செயல்பாடுகள் இல்லை என்பதால், அப்பதவியை நிர்வாகப் பதவியாகக் கருதமுடியாது. என்னை நீக்கியதையும், நிர்வாகக் குழுவுக்கு நடைபெற்ற தேர்தலையும் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். தமிழகத்தில் இருந்து யாரும் நிர்வாகக் குழுவில் இருக்கக் கூடாது என்பதற்காகவே முதல்முறையாகத் தேர்தலை நடத்தியுள்ளனர் என்றார்.

உங்களை நீக்கியதைப் பழிவாங்கும் நடவடிக்கையாக கருதுகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது: அவர்களது செயல்பாடுகள் குறித்து, வீரர்கள் தேர்வு குறித்தும் நான் கேள்வி எழுப்பினேன். அதனால், என்னை அவர்கள் விரும்பவில்லை. சென்னை ஓபன் போட்டி நடத்தப்பட்டதற்கு ராயல்டி தொகை வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் தான் எங்களை நீக்கிவிட்டனர் என்றார்.

மின்னணி வீரர்கள் விலகிவிட்டதால், ஆசியப் போட்டிக்கு டென்னிஸ் வீரர்களை அனுப்ப வேண்டாம் என்று நானோ, டென்பின் பெளல் சங்க நிர்வாகிகளோ மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை என்றார் கார்த்திக் சிதம்பரம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago