முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் எம்.பி.க்களுக்கு பாடம் கற்பிக்க நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப்.15 - முன்னாள் எம்.பி.க்கள் பலர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்யாமல் பிடிவாதம் பிடித்து வருவதால் தண்ணீர் மற்றும் மின் இணைப்பைத் துண்டிக்க புது டெல்லி நகராட்சி கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்ட்ரிய லோக் தள் தலைவர் அஜித் சிங், இவருக்கு ஒதுக்கப்பட்ட துக்ளக் லேன் பங்களாவை காலி செய்ய மறுப்பதோடு காலி செய்ய வைக்க முயற்சி செய்த டெல்லி போலீஸையும் தனது ஆட்கள் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளார். மற்றொரு முன்னாள் எம்.பி. ஜிதேந்திர சிங், மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய அரசியல்வாதியுமான மொகமது அசாருதீன், மேலும் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர் ஆகியோரும் காலி செய்யாமல் பிடிவாதம் பிடிப்பதால் தற்போது இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் செலுத்த வேண்டிய மின்கட்டணம், மற்றும் தண்ணீர் கட்டணம் ஆகியவற்றையும் செலுத்த வேண்டும் எனவும் இது பங்களாவைக் காலி செய்யும் முன்னாள் எம்.பி.க்களின் பொறுப்பு என்றும் இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்