முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க மீதான ஆம் ஆத்மி புகார்: விசாரணை தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப்.15 - டெல்லியில் ஆட்சி அமைக்க குதிரை பேரத்தில் பாஜக ஈடுபடுவ தாக ஆம் ஆத்மி கட்சியினர் புகார் தெரிவித்தனர். இது தொடர் பாக அளிக்கப்பட்ட வீடியோ ஆதாரம் தொடர்பாக போலீஸார் விசாரணையை தொடங்கி யுள்ளனர்.

இது குறித்து டெல்லி போலீஸ் குற்றப்பிரிவு இணை ஆணையர் ரவீந்திர யாதவ் செய்தியாளர்களிடம் கூறும் போது, "இந்தப் புகாரின் மீது இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. எனினும், இந்த புகாரின் மீது தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

டெல்லியில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடந்த வாரம் பரிந்துரைத்திருந்தார்.

ஆட்சி அமைக்க பாஜகவுக்கு கூடுதலாக 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்பட்டது. அதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஒருவரை ரூ. 4 கோடி லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்க பாஜக முயற்சித் ததாகக் கூறப்படுகிறது. இது தொடர் பாக ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரி வால் டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாஸியிடம் புகார் அளித்திருந்தார்.

அதில், பாஜகவின் துணைத் தலைவரான ஷேர் சிங் டாகர் மற்றும் அவரின் ஆதரவாளர் ரகுவீர் தஹியா ஆகியோர் ரூ. 4 கோடி கொடுத்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தினேஷ் மொஹனி யாவின் ஆதரவைப் பெற முயற்சித் ததாக கேஜ்ரிவால் குற்றம் சாட்டி யிருந்தார். அதற்கு ஆதாரமாக தனது கட்சியினர் ரகசிய கேமராவில் பதிவு செய்த வீடியோ சி.டி. ஆதா ரத்தையும் அவர் அளித்திருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்