முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி இடைத்தேர்தல்: இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப் 16 - உள்ளாட்சி இடைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கோவை, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும், எட்டு நகராட்சி தலைவர் உட்பட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள பதவிகளுக்கும் வரும் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 22ம் தேதி எண்ணப்பட உள்ளன.

உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக , பாஜக ஆகிய கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. அதிமுக அனைத்து இடங்களில் போட்டியிடுகிறது. மாநகராட்சி, சில நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக போட்டியிடுகிறது. முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தை தூத்துக்குடியில் தொடங்கினார். கோவை மாநகராட்சிகளில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து உள்ளாட்சி இடைத்தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது.

தமிழக பாஜகவை சேர்ந்த தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த 2 நாட்களாக மேற்கொண்டு வருகிறார்கள். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், மூத்த தலைவர்கள் எச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உள்ளாட்சி இடைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதன்பின் மாநகராட்சிக்கு தொடர்பில்லாதவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிகளை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், பிற உள்ளாட்சி அமைப்புகளில் வாக்கு சீட்டு முறையும் பயன்படுத்தப்படவுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்