முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் +2 காலாண்டு தேர்வு தொடங்கியது

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்: 16 – சமச்சீர் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டுமின்றி காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ஒரே நேரத்தில் தொடங்கி முடிக்கப்படுகின்றன.வினாத்தாள்கள் அரசு தேர்வுத்துறை மூலம் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பப்படுகிறது.

பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திலும் ஒரே விதமான கேள்வித் தாள்கள் வழங்கப்படுகின்றன.

பொதுத்தேர்வை போல 3 மணி நேரம் தேர்வு எழுதவும், அதற்கு முன்னதாக 10 நிமிடங்கள் வினாத்தாளை படிக்கவும், 5 நிமிடங்கள் விடைத்தாளை பூர்த்தி செய்யவும் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

பிளஸ்–2 காலாண்டு தேர்வு தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நேற்று

தொடங்கியது. நேற்று தமிழ் முதல்தாள், இன்று தமிழ் இரண்டாம் தாள், 17–ந்தேதி ஆங்கிலம் முதல் தாள், 18–ந் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வுகள் நடைபெறுகின்றன.

19–ந்தேதி கணிதம், விலங்கியல், மைக்ரா பையாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் நடக்கின்றன. 20 மற்றும் 21–ந்தேதி (சனி, ஞாயிறு) விடுமுறையாகும். தொடர்ந்து 22–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.

10–ம் வகுப்பு காலாண்டு தேர்வு நாளை (17–ந்தேதி) தொடங்கி 26–ந்தேதி முடிவடைகிறது.

காலாண்டு விடுமுறை 27–ந்தேதி தொடங்கி அக்டோபர் 5–ந்தேதி வரை விடப்படுகிறது. விடுமுறைக்குப் பின் அக்டோபர் 6–ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்