முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸாவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

தாஸா, செப்.16 - இஸ்ரேலுடன் நடைபெற்ற ஐம்பது நாள் போருக்குப் பிறகு காஸா பகுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இது குறித்து தகவலை வெளியிட்ட காஸா பகுதி கல்வி த் துறை அதிகாரி ஒருவர், ஒன்றாம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்புரை கல்வி கற்றும் மாணவர்கள் மீண்டும் பள்ளிகளுக்கு செல்லத் தொடங்கினர். மேலும் அவர் கூறியதாவது:

இது கல்வி ஆண்டின் முதல் நாளாகும். அரசுப் பள்ளிகளில் கல்வி 2,30,000 மாணவர்கள் ஐநா அமைப்பு நடத்தும் பள்ளிகளில் கல்வி கற்கும் சுமார் 2 லட்சம் பேர் மீண்டும் தங்கள் ழகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினர். இது தவிர, பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் கல்வி கற்கும் தனியார் பள்ளிகளுக்கும், செயல்படத் தொடங்கியுள்ளன.

போரின் போது, கல்விக் கூடங்கள் பல சேதமடைந்துவிட்டன. மேலும் ஐநா நடத்திவரும் பல தல்லிக்கூடங்கள் அடைக்கால மையங்களாகப் பயன்படுத்தப்படு வந்தன. இதனால் பள்ளிகளின் திறப்பு இரண்டு வாரங்கள் தாமதமானது. முதல் வாரம் வழக்கமான பாடங்கள் நடைபெறாது. போர் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கும் விதமான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 3 ஆயிரம் தலைமை ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளததததததது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் இடையேயான 50 நான் போரில் 2,100 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலும் பொதுமக்கள் ஆவர். அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கேடயமாக ஹமாஸ் பயன்படுத்தியதாக இஸ்ரேல் கூற்றம்சாட்டியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்