முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் சுற்றுலா படகு மூழ்கி 14 பேர் பலி

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

ஜகார்தா, செப்.16 - இந்தோனேசியாவை சுற்றிலும் 17 ஆயிரம் குட்டி தீவுகள் உள்ளன. இந்த தீவுகளை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் படகுகளில் பயணம் மேற்கொள்கின்றனர். சில நேரங்களில் மோசமான வானிலையால், படகுகள் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடக்கின்றன.

இந்நிலையில், இந்தோனேசியாவை சேர்ந்த 35 பேர் ஒரு நீண்ட படகில் சுலா தீவுக்கு சுற்றுலா பயணம் சென்றனர். நடுக்கடலில் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென ராட்சத அலைகள் எழும்பின நிலைதடுமாறிய படகு , கவிழ்ந்து மூழ்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடலோர காவல் படையினரும் அவசரகால மீட்பு குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 9 பேரை உயிரோடு மீட்டனர். 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 12 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் ராணுவ மீட்பு படகுகளும் ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் லம்போக் தீவில் இருந்து கோமாடோ தீவுக்கு 18 வெளிநாட்டு பணிகள் சென்ற படகு திடீரென மூழ்கியது. இவர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்