முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரு நாட்டில் 650 பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 26 பேர் பலி

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

லிமா, செப்.16 - பெரு நாட்டில் 650 அடி பலைப்பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த பயங்கரவிபத்தில் 6 குழந்தைகள் உள்பட 26 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயமடைந்தனர்.

தென் அமெரிக்க கணடத்தில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு பெரு. இங்கு அபுரிமாக் பிராந்தியத்தில் ஏராளமான மலைகள் உள்ளன. இங்குள்ள 7 குறுகிய அபாய வளைவுகள் கொண்ட மலைப்பாதையில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. அங்குள்ள சால்ஹான்கா நகரில் ஒரு கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்தாண்டு திருவிழாவில் பங்கேற்பதற்காக, பியூகியோ நகரில் இருந்து பக்தர்கள் ஒரு பஸ்சில் புறப்பட்டனர். மலைப்பாதையில் கோட்டாரஸ் என்ற இடம் அருகே ஒரு குறுகிய வளைவில் பஸ் திரும்பிய போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஏடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் 650 அடி ஆழ மலை பள்ளத்தில் கவிழ்ந்தது.

பஸ்சுக்குள் இருந்தவர்கள் அலறித் துடித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும் மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 26 பேர் பரிதாபமாக பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். பலியானோரின் உடல்களை போலீசார் மீட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

பெரு நாட்டில் பலைப்பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளன. இவற்றில் வாகனங்கள் இறங்கி ஏறும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்