முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் காட்டு தீ: 1000 பேர் வெளியேற்றம்

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

ஓக்ஹர்ஸ்ட், செப்.16 - அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் மலைத் தொடர்கள் உள்ளன. இங்கு காட்டு மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்த காடுகளில் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்பட்டு, அப்பகுதியே கரும்புகை மண்டலமாக மாறிவிடுகிறது. கலிபோர்னியாவில் ஓக்ஹர்ஸ்ட் நகரையொட்டி உள்ள வனத்தில் பயங்கர தீ ஏற்பட்டது. பலத்த காற்று வீசியதால், பாஸ் ஏரி மற்றும் சாகர்மென்டோ பகுதியில் 320 ஏக்கரில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து கலிபோர்னியா மாகாண தீயணைப்பு படையினர் மீட்பு குழுவினரும் விரைந்து வந்து தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்பகுதியில் வசித்து வந்த 400 குடும்பங்களை சேர்ந்த 1000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர். விமானங்கள் மூலம் தீயணைக்கும் பணி நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்