முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.17 - தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஒடிசா அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட மற்றும் தென் தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில நேரங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சென்னையில் பலத்த மழை:

சென்னையில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. பயங்கர இடி, மின்னலும் நிலவியது. சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் சென்னை நகரமே குளிர்ந்தது. இதேபோல் புறநகர் பகுதியிலும் மழை கொட்டியது.

பட்டினப்பாக்கம் பாம்பன் சாலையில் மழை காரணமாக தென்னை மரம் முறிந்து விழுந்தது இதில் அருகில் ஒதுங்கி இருந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலியானார். இவர் பிளாட் பாரத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி.இது குறித்த பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதே போல் ஆழ்வார் பேட்டை டி.டி.கே.ரோட்டிலும் மரம் முறிந்து விழுந்தது.

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் 30 நிமிட நேரம் தரை இறங்கவும், புறப்பட்டு செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டது.ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூர் நகரங்களில் இருந்து வந்த 3 விமானங்கள் தரை இறங்க முடியாமல் தவித்தன. சுமார் 30 நிமிட நேரம் விமானங்கள் வானில் வட்டமிட்டன. காற்று–மழை குறைந்த பிறகுதான் தரை இறங்கியது.சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் 30 நிமிட நேரம் தரை இறங்கவும், புறப்பட்டு செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டது.

சென்னையை போல் காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது.

இதுபற்றி வானிலை மைய அதிகாரி கூறியதாவது:–

ஒடிசா அருகே வழிமண்டல மேலடுக்கில் உருவான சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் நிலவி வரும் வெப்ப சலனத்தாலும் பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழை இன்றிரவும் நீடிக்கும்.

(நேற்று) காலை 8.30 மணி வரை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 24.8. மி.மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 21.4 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது சிறு தூறல்களுடன் மழை பெய்யும். இரவில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவள்ளூரிலும் நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது. நேற்று காலையும் லேசான தூறல் மழை பெய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்