முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்பிரமணிய சுவாமி மீது முதல்வர் மீண்டும் வழக்கு

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.16: பிஜேபி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா மீண்டும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்..

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி சுப்பிரமணியசாமி, தனது டூவிட்டர் இணையதள பக்கத்தில், ‘திலீபன் நினைவு நாளை கொண்டாட தமிழக அரசு அனுமதி வழங்குகிறது’ என்று குறிப்பிட்டு சில அவதூறு கருத்துக்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக குறிப்பிட்டுள்ளார்.

இதனால், பொதுமக்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, சுப்பிரமணியசாமி மீது அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இந்த மனு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே, சுப்பிரமணிய சாமி மீது தமிழக முதல் அமைச்சர் சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

தற்போது, 3–வது வழக்கு சுப்பிரமணியசாமி மீது நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்