முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பகோணம் விபத்து: இழப்பீடு கமிஷன் தலைவர் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 17 – கும்பகோணம் தனியார் பள்ளி கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16–ந்தேதி நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் குறித்து பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்கப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட செசன்சு கோர்ட்டு, தாளாளர் உட்பட பலருக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட பல்வேறு தண்டனைகளை வழங்கி கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.

இதற்கிடையில், தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு நிர்ணயம் செய்து வழங்குவதற்கு ஐகோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதியை நியமிக்கும்படி தீ விபத்தில் பலியான குழந்தையின் தந்தை கே.இன்பராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், ‘இழப்பீட்டை நிர்ணயம் செய்ய ஐகோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் 19–ந்தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தமிழக அரசு தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடு நிர்ணயம் செய்ய ஓய்வுப்பெற்ற நீதிபதி பி.சண்முகம் தலைமையிலான விசாரணை கமிஷன் அமைத்து கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்பு ஓய்வுப்பெற்ற நீதிபதி பி.சண்முகம் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘என் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த விசாரணை கமிஷனுக்கு தலைமை தாங்க முடியாது’ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமனை, இழப்பீடு நிர்ணயம் செய்யும் கமிஷன் தலைவராக நியமிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதி டி.அரிபரந்தாமன் நேற்று உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago