முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கலெக்டர்களுக்கு 12 அறிவுரைகள்

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.17 – கோவை, தூத்துக்குடி மேயர் பதவி உள்பட உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு நாளை (18–ந்தேதி) தேர்தல் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக பின் பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் 12 அறிவுரைகள் வழங்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு:–

* உள்ளாட்சி தேர்தலின்போது உயர்நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டிய தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் வீடியோ படம் எடுப்பவர் எந்த கட்சியையும் சாராதவராக இருக்க வேண்டும்.

* நன்னடத்தை விதிகளை மீறுவோர் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ஓட்டு போட எந்தெந்த ஆவணங்களை வாக்காளர்கள் பயன்படுத்தலாம் என்ற உத்தரவு ஏற்கனவே உள்ளது. இதை அதிகாரிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

* வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் எந்த அரசியல் கட்சியும் தேர்தல் முகாம் அமைக்க கூடாது. இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

* ஓட்டுசாவடி– ஓட்டு எண்ணும் இடங்களுக்கு செல்போன் தடை செய்யப்பட்டுள்ளது.

* ஓட்டு எண்ணும் மையங்களில் வீடியோ எடுப்பது விதிமுறைப்படி செயல்பட வேண்டும்.

* அரசியல் கட்சி முகவர்கள் கட்டாயம் புகைப்படம் ஒட்டி அனுமதி சீட்டை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பெற்றிருக்க வேண்டும்.

* ஓட்டுசாவடி– ஓட்டு எண்ணும் இடங்களில் ஆயுதங்கள் அனுமதிக்க கூடாது.

* தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 16.9.14 மாலை 5 மணி முதல் 18.9.14 மாலை 5 மணி வரை 48 மணி நேரம் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். ஓட்டு எண்ணும் நாளான 22–ந்தேதியும் மதுக்கடை மூடி இருக்க வேண்டும்.

* தேர்தலில் ஏற்படும் சம்பவங்கள் பற்றி உடனுக்குடன் அறிக்கையை ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.

* தேர்தல் தொடர்பாக வரும் புகார் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் இடங்களில் 18–ந்தேதி உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago