முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதையில் மங்கள்யான் நிறுத்தப்படுவதை பிரதமர் பார்க்கிறார்

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், செப் 18:

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் எனும் விண்கலத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி இந்தியா விண்ணில் ஏவியது. மணிக்கு 82 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் வகையில் மங்கள்யான் பயணம் மேற்கொண்டது.

மங்கள்யான் விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தை நெருங்கியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் செவ்வாய் கிரகத்தின் மிக அருகில் சென்று விடும். அப்போது மங்கள்யான் விண்கலத்தின் வேகம் குறைக்கப்படும். வேகம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் அதை செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்துவார்கள். அப்படி நிலை நிறுத்துவது இந்திய விஞ்ஞானிகளுக்கு இந்த பணி வருகிற 21ம் தேதி தொடங்கி நடைபெறும். அதன்பிறகு 3 நாட்கள் கழித்தே 24ம் தேதி காலை 7.30 மணிக்கு மங்கள்யான் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும்.

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் விடப்படுவதை பிரதமர் நரேந்திர மோடி பார்க்கிறார். இதற்காக அவர் வருகிற 23ம் தேதி கர்நாடகா செல்கிறார். பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு அங்கு முதல் முறையாக செல்கிறார். அன்று இரவு பெங்களூரில் தங்குகிறார். மறுநாள் காலை தும்கூர் மாவட்டத்தில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்துக்கு சென்று மங்கள்யான் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுவதை விஞ்ஞானிகளுடன் இணைந்து பார்க்கிறார். இந்த பணி வெற்றிகரமாக முடிந்து விட்டால் செவ்வாய் கிரகத்தில் இருந்து சுமார் 365 கிலோ மீட்டர் தொலைவில் மங்கள்யான் சுற்றி வரும். அதன் பிறகு 3 நாட்கள் கழித்து 27ம் தேதி முதல் செவ்வாய் கிரகத்தில் உள்ள இயற்கை வளங்களை ஆய்வு செய்யும் பணியை மங்கள்யான் விண்கலம் தொடங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago