முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடிக்கு கருணாநிதி - வைகோ பிறந்தநாள் வாழ்த்து

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 18 – பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் கருணாநிதி,வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

தி.மு.க. சார்பில், உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து, நாட்டுக்கு சேவையாற்றி, திருப்திகரமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அந்த செய்தியில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–

உங்களுடைய பிறந்த நாள் இன்னும் எண்ணற்ற முறை சிறப்பாக வருவதற்கு ம.தி.மு.க. சார்பில் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டை உயர்ந்த சிகரங்களுக்கு இட்டுச் செல்லும் வகையில் இந்திய நாட்டு மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையில் புதிய விடியலை உருவாக்க நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ இயற்கை தாய் தனது அனைத்து ஆசிகளையும் வழங்க விழைக்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்