முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை மேயர் தேர்தலில் 46.53 சதவீதம் வாக்குப்பதிவு

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

கோவை, செப்.19 - கோவை மாநகராட்சி மேயராக இருந்த செ.மா.வேலுசாமி ராஜினாமா செய்ததை தொடர்ந்து கோவை மாநகராட்சிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க வேட்பாளராக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். எதிர்த்து பா.ஜ.க உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றனர். பலத்த பாதுகாப்புடன் நேற்று வாக்கு பதிவு நடைபெற்றது. காலையிலிருந்தே வாக்கு பதிவு மந்தமாகவே இருந்தது. மாலை 5 மணியுடன் வாக்கு பதிவு முடிவடைந்தது. மொத்தம் 46.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சூலூர் பேரூராட்சியில் 66 சதவீதமும், இருகூர் பேரூராட்சியில் 61 சதவீதமும், கோட்டூர், வேட்டைகாரன்புதூர், சர்க்கார்சாமக்குளம் பகுதியில் 84 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. கிணத்துகடவு ஒன்றிய குழு உறுப்பினர் தேர்தலில் 71 சதவீதமும், சூலூர் ஊராட்சி குழு உறுப்பினர் தேர்தலில் 55 சதவீதமும் பதிவாகியிருந்தன. ஆனைமலை, அன்னூர், காரமடை, பொள்ளாச்சி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 77 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தமாக மேயர் தேர்தலில் 46.53சதவீதமும் பேரூராட்சியில் 65 சதவீதமும், ஊரக பகுதியில் 61 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. வாக்கு பதிவு முடிவடைந்ததும் வேட்பாளர்கள் மற்றும் ஏஜென்டுகள் முன்னிலையில் ஓட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் இடத்திற்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளன. அங்கு ஓட்டுப்பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்