Idhayam Matrimony

அமெரிக்க தரைப்படையை எதிர்கொள்ளத் தயார்: ஐ.எஸ்.

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ரூட், செப் 19 - ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. வான்வழி தாக்குதல் மட்டும் நடத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. ஆனால் அமெரிக்க இணை தளபதி மார்ட்டின் டெம்ப்சி கூறும் போது, அமெரிக்காவின் வான்வழி தாக்குதல் மட்டும் பலன் தரும் என்று நினைக்கவில்லை. அது பலன் தராத பட்சத்தில் தரைவழி தாக்குதல் நடத்தவும் தயாராவோம் என்று கூறினார்.

இதையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 52 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவுக்கு போர் தீக்கதிர்கள் என்று பெயரிட்டுள்ளனர். அதில் பேசிய தீவிரவாதி அமெரிக்க தரைப்படை எங்கள் மண்ணுக்கு வருவதை வரவேற்கிறோம். அவர்கள் இங்கு வந்தால்தான் உண்மையான போர் தொடங்கும். அவர்களை எதிர்நோக்கி நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இளைஞர்களை இழுக்கும் வகையில் புதிய வீடியோ கேம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர். அதில் எதிரிகளை தலை துண்டித்து கொல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ கேம் இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டி அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்