முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் வருண்காந்திக்கு கட்சி பொறுப்பு வழங்க வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப் 19 - உத்தரபிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்தது. 11 சட்டசபை தொகுதிகளில் 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த 11 தொகுதிகளும் 2012 தேர்தலில் பா. ஜனதா வெற்றி பெற்ற தொகுதிகள் ஆகும்.

மத்தியில் ஆட்சியை பிடித்த சில மாதங்களிலேயே பாரதீய ஜனதா இந்த அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்தது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தோல்வி குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. பாரதீய ஜனதா தலைவராக பொறுப்பேற்ற அமீத்ஷா கட்சியில் பல மாற்றங்களை செய்தார். மேலிட நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டனர். இது கட்சியினரிடையே அதிருப்தி அடைய செய்தது. இதுவும் தேர்தல் தோல்விக்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த மத்திய மந்திரி மேனகா காந்தி இதை ஒப்புக் கொண்டார். அவரது மகனும், சுல்தான்பூர் எம்.பியுமான வருண்காந்தி பாரதீய ஜனதா பொதுச்செயலாளராக இருந்தார். அமீத்ஷா அவரிடம் இருந்த பொதுச்செயலாளர் பதவியை பறித்தார். குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற பாரதீய ஜனதாவின் புதிய கொள்கைப்படி தாயார் மேனகா காந்தி மந்திரியாக இருப்பதால் வருண் காந்திக்கு பொறுப்பு கிடையாது என்று கூறப்பட்டது. இது பற்றி மேனகா காந்தியிடம் கேட்டதற்கு, ஒட்டு மொத்தமாக இதை காரணமாக கூற முடியாது என்றார். மேலும் உள்ளூர் பிரச்சினைகள் தான் சட்டசபை தேர்தலில் எதிரொலித்தன. அங்கு கட்சியின் சரிவை தடுக்க வருண் காந்திக்கு மீண்டும் கட்சி பொறுப்பு வழங்க வேண்டும் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்