முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் சீன அதிபரை எதிர்த்து திபெத்தியர்கள் போராட்டம்

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable


புது டெல்லி, செப் 19 - இமயமலையின் வடக்கு பகுதியில் உள்ள திபெத், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. திபெத்தை சீனாவின் பிடியில் இருந்து விடுதலை பெறுவதற்காக திபெத்தியர்கள் நீண்ட நாட்களாக போராடி வருகிறார்கள்.
இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் டெல்லியில் சீன தூதரகம் முன் திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். நேற்று ஜி ஜின்பிங்கும், மோடியும் டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பேச்சு நடத்திய போது வெளியே ஆவேசத்துடன் திபெத்தியர்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களை அவர்கள் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது ரோட்டில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து குண்டுகட்டாக வேனில் ஏற்றி சென்று அப்புறப்படுத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்