எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப் 19 - 2011-ம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் திமுக இடம் பெற்ற போது கேந்திரிய இந்தி சமிதி எடுத்த முடிவுகளை எதிர்த்தால் தனது மகள் கனிமொழி ஜாமீனில் வெளிவர முடியாது என்பதற்காக எதிர்ப்பு தெரிவிக்காமல் கருணாநிதி தமிழ் மொழியையே அடமானம் வைத்தது அம்பலமாகி இருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்..
அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு யு.ஜி. சி., அனுப்பியுள்ள கடிதத்தில், பட்டப்படிப்பில், ஆங்கிலத்துடன் இந்தி மொழியையும் சேர்த்து கற்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பல்கலைக்கழகங்கில் இந்தி மொழியை கட்டாயமாக்க கூடாது என்றும் முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தி மொழியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக தி.மு.க. சார்பில்
. டி.கே.எஸ். இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் . வைகோ மற்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் குற்றம்சாட்டி, இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தச் சுற்றறிக்கை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் 16.9.2014 அன்று கிடைக்கப் பெற்றுள்ளது.இந்தச் சுற்றறிக்கையைப் படித்துப் பார்க்கும் போது, அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய இந்தி சமிதியின் 30-வது கூட்டம் 28.7.2011 அன்று அன்றைய பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெற்றதும், அந்தக் கூட்ட நடவடிக்கை குறிப்பின்படி, பட்டப் படிப்பில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் ஒரு முதன்மைப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்; சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்பு பயில்வோருக்கு கட்டாயமாக ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று இருப்பது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்பதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்த அறிக்கையை பல்கலைக்கழகங்களிடம் பல்கலைக்கழக மானியக் குழு கோரியுள்ளதும் தெரிய வருகிறது.
28.7.2011 அன்று நடைபெற்ற கூட்டத்தில், குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலம் அல்லது இந்தி படித்து பட்டம் பெறுகின்றனர் என்றும், இதன் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களின் செயல்பாட்டிற்கு தேவையான மொழி பெயர்க்கும் திறன் அவர்களுக்கு ஏற்படாது என்றும் தெரிவித்து; குஜராத்தில் பயிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டும் படிப்பதை பல்கலைக்கழக மானியக் குழு உறுதி செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுரைகளின்படி, சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்புகளில் ஆங்கிலம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து, இந்தி மொழி திணிக்கும் முயற்சிக்கு அடிப்படைக் காரணம், அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய இந்தி சமிதி 28.7.2011 அன்று எடுத்த முடிவுகள் தான் என்பது தெரிய வருகிறது. அப்போது மத்தியிலே ஆட்சியில் இருந்தது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. அந்த கூட்டணி அரசிலே அங்கம் வகித்த கட்சி தி.மு.க. இப்படிப்பட்ட ஒரு முடிவை முந்தைய மத்திய அரசு எடுத்த போது வாய் திறக்காத தி.மு.க. தலைவர் . கருணாநிதி, தற்போது . டி.கே.எஸ். இளங்கோவன் மூலம் பெயரளவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
அப்போது, ""இந்தி மொழி"" பற்றி கூறினால் "கனிமொழி"" ஜாமீனில் வெளிவர முடியாது என்று பயந்து வாய்மூடி மவுனியாக இருந்தவர், இன்று இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இருப்பது தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டைத் தான் எடுத்துக் காட்டுகிறது. இதிலிருந்து, கனிமொழிக்காக தமிழ் மொழியை . கருணாநிதி அடமானம் வைத்தது அம்பலமாகி உள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில், இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளது.
1963 ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தில், இந்தி மொழி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழியை திணிக்கக் கூடாது என்று தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. இந்தச் சட்டத்தின் 3-வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களைப் பொறுத்த வரையில், மத்திய - மாநில அரசுகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில் தான் இருக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தச் சட்டத்தின்படி வகுக்கப்பட்ட 1976 ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் (மத்திய அரசின் அலுவலகப் பயன்பாடு) விதிகளின்படி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் மற்றும் சண்டிகர், டாமன், டையூ, தாத்ரா மற்றும் நகர்ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள் """"மண்டலம் B"" என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. ""மண்டலம் B""-ன் கீழ் வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடனான மத்திய அரசின் தகவல் பரிமாற்றம் சாதாரணமாக இந்தி மொழியில் இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டால் அத்துடன் இந்தி மொழி பெயர்ப்பும் அனுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்கள் ""மண்டலம் C"" என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. """"மண்டலம் C""-ன் கீழ் வரும் மாநிலங்களுடனான தகவல் பரிமாற்றம் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தச் சுற்றறிக்கை அறவே பொருந்தாது.
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை நான் வலியுறுத்திக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில்; ஆங்கிலத்துடன் இந்தியையும் முதன்மை பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும்; சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்புகளில் ஆங்கிலம் கற்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொள்வது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று என்பதோடு மட்டுமல்லாமல், சட்டத்திற்கும் புறம்பானது ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் அல்லது இதர மொழிகள் முதல் பகுதியாகவும், ஆங்கிலம் இரண்டாம் பகுதியாகவும், சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகள் மூன்றாம் பகுதியாகவும் தொடர்ந்து இருக்கும் என்பதையும்; 28.7.2011 அன்று நடைபெற்ற கேந்திரிய இந்தி சமிதி கூட்ட முடிவுகள் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என்பதையும் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.