முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி இடைத் தேர்தல் நேர்மையாக நடக்கின்றது: ஆணையர்

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 18–உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. சென்னை 35வது வார்டில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணியளவில் 14% வாக்குப்பதிவானது.

சென்னை மாநகராட்சி 35வது வார்டு இடைத்தேர்தல் நேற்று காலை 7 மணியிலிருந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வார்டு முன்னாள் கவுன்சிலர் ஞானசேகர் மரணமடைந்ததையொட்டி இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஞானசேகர் மகன் டேவிட் ஞானசேகர் போட்டியிடுகிறார்.பிஜேபி சார்பில் லட்சுமி நரசிம்மன் உட்பட 5பேர் போட்டியிடுகின்றனர்.

35வது வார்டில் 12வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மந்தமான நிலையில் தொடங்கி ,பின்னர் 9 மணிக்கு மேலாக விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 11 மணி நிலவரப்படி 14 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்த வார்டில் சுமார் 70சதவீதம் வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, கடலூர், விருத்தாசலம், அரக்கோணம், ராமநாதபுரம் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவி உட்பட 530 பதவிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.எந்த அசம்பாவிதமும் இன்றி அமைதியாக தேர்தல் நடந்தது.

சென்னை மாநகராட்சி 35–வது வார்டு தேர்தலில் விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு மாநில தேர்தல் ஆணைய தலைவர் அய்யர் நேரில் சென்று பார்த்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

, . தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்து வருகிறது. இதுவரை எந்த புகாரும் வரவில்லைஎந்தவித அசம்பாவிதமும் எந்த இடத்திலும் ஏற்படவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

புகார் ஏதாவது இருந்தால் அதை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும.தமிழகம் முழுவதும் சராசரியாக 12 மணி அளவில் 30 சதவிகித வாக்குப்பதிவாகி இருந்தது இவ்வாறு அவர் கூறினார்.2 மேயர், 4 நகராட்சி தலைவர் பதவி தவிர 8 மாநகராட்சி கவுன்சிலர்கள், 23 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 39 பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 530 உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவிகளைப் பிடிப்பதற்காக 1,486 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அனைத்து இடங்களிலும் அண்ணா தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. பா.ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் மட்டுமே களத்தில் உள்ளனர்.

காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதையொட்டி அந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. மற்ற உள்ளாட்சி பதவிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் வாக்குச்சீட்டு முறைப்படி ஓட்டுக்கள் போடப்பட்டன.

பதட்டமான வாக்குச்சாவடிகளில் நடந்த ஓட்டுப்பதிவு முழுவதும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டன. காலை முதலே பெரும்பாலான பகுதிகளில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. ஆண்களும் பெண்களும் நீண்ட ‘கியூ’வில் நின்று ஓட்டு போட்டனர். நேரம் ஆக ஆக ஓட்டுப்போட வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமானது

.கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக கணபதி ராஜ்குமார், பாரதீய ஜனதா வேட்பாளராக நந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக பத்மனாபன் உள்பட 16 பேர் போட்டியிடுகிறார்கள்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு அண்ணா.தி.மு.க. சார்பில் அந்தோணி கிரேசி, பாரதீய ஜனதா சார்பில் ஜெயலட்சுமி மற்றும் 5 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்