முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருக்கோவில் செயல் அதிகாரி பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, செப். 19 – வடகலை மற்றும் தென்கலை பிரிவுகளிடையே வாக்குவாதம். திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவில் கதவை இழுத்து மூடினர். திருக்கோவில் செயல் அதிகாரி பதில் அளிக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சுவாமி கோவிந்தராமானுஜர் தாசர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம், திருவந்திபுரத்தில் உள்ள அருள்மிகு தேவநாதசுவாமி கோவில், 108 திவ்யதேசம் வைணவக் கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலை பற்றி திருமங்கையாழ்வார் 10 பாடல்களை பாடியுள்ளார். திருப்பதி வெங்கடேசபெருமாளின் மூத்த சகோதரர் தேவநாதசுவாமி என்று கருதப் பட்டு, வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

திருவந்திபுரம் தேவநாதசுவாமி திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகிக்கும் கோவிலாகும். இந்த கோவிலுக்கு அருகே, மாடவீதியில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் சுவாமி சன்னதி உள்ளது. ஒவ்வொரு மாதமும் மூலநட்சத்திர நாளிலும், ஐப்பசி மாதம் 10 நாட்களும் மணவாள மாமுனிகள் சுவாமியின் உற்சவர் வீதி உலா நடைபெறும்.

இந்த உற்சவர் வீதி உலா, மணவாள மாமுனிகள் கோவில் வாசலில் இருந்து புறப்பட்டு, தேந õதசுவாமி கோவிலை சுற்றியுள்ள பிரகாரங்களை சுற்றி வருவது வழக்கம். கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி வீதி உலா நடந்தது. உற்சவர் சப்பரம், தேவநாதசுவாமி கோவில் நுழைவு வாயில் அருகே வரும்போது, வைணவத்தை சேர்ந்த வடகலை பிரிவை சேர்ந்த சிலர் கோவில் கதவை இழுத்து மூடினர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தபோது, என்னை அவர்கள் தாக்க முற் பட்டனர். மேலும், மணவாள மாமூனிகள் சுவாமியை வணங்குபவர்கள் தீண்டத்தகாத பிரிவை ÷ சர்ந்தவர்கள் என்றும் உற்சவர் வீதி உலாவில் வருபவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றும் கூறினர்.

இதையடுத்து வைணவத்தில் உள்ள வடகலை மற்றும் தென்கலை பிரிவுகளை சேர்ந்தவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உற்சவர் வீதி உலா வரும்போது, கோவில் கதவை மூடவேண்டும் என்று எந்த நிர்வாக உத்தரவும் இல்லை. மேலும், அந்த கதவை பூட்டுபவர்களும், கோவில் ஊழியர் அல்ல. எனவே, இதுசம்பந்தமாக கடலூர் மாவட்ட கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உள்ளிட்டோருக்கு கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி புகார் கொடுத்தேன்.

எனவே, வருகிற அக்டோபர் 19-ந் தேதி நடைபெறும் மணவாள மாமுனிகள் சுவாமி வீதி உலா ந டைபெறுகிறது. அப்போது, தேவநாதசுவாமிகள் கோவில் கதவை மூடக்கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர், கோவில் நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும்.

மேலும் கடந்த ஆண்டு நான் கொடுத்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீ திபதி, மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி கடலூர் மாவட்ட கலெக்டர், இந்து அற நிலையத்துறை உதவி ஆணையர், திருக்கோவில் செயல் அதிகாரி ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்