முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிபிஐ இயக்குநர் மீதான வழக்கு: பிரசாந்த் பூஷன் மறுப்பு

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.19 - சிபிஐ இயக்குநர் வீட்டு வரவேற்பறை டைரியை கொடுத்தவரின் பெயரை தெரிவிக்க, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் சுப்ரீம்கோர்ட்டில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சிபிஐ இயக்குநர் வீட்டு வரவேற்பறை டைரியை கொடுத் தவரின் பெயரை தெரிவிக்குமாறு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு திங்கள் கிழமை ( செப்டம்பர் 15-ம் தேதி) சுப்ரீம்கோர்ட்ட உத்தரவிட்டிருந்தது.

நிலக்கரி சுரங்க உரிமம், 2ஜி அலைக்கற்றை ஊழல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை அவரது வீட்டில் பல முறை சந்தித்தனர். எனவே, சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து ரஞ்சித் சின்ஹாவை நீக்க வேண்டும் என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, பார்வையாளர்கள் விபரங்கள் அடங்கிய சிபிஐ இயக்குநர் வீட்டு வரவேற்பறை டைரியை சுப்ரீம்கோர்ட்டில் பிரசாந்த் பூஷண் ஒப்படைத்தார்.

ரஞ்சித் சின்ஹா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், "சிபிஐ இயக்குநரின் வீட்டு வரவேற்பறை டைரி என்று கூறி, மனுதாரர் தாக்கல் செய்துள்ள ஆவணத்தின் உண்மைத் தன்மை மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

அதில் 10 சதவீத பதிவுகள் உண்மையாக இருக்கலாம். மீதி 90 சதவீதம் போலியானவை. இந்த டைரியை கடந்த 7-ம் தேதி இரவு 10 மணிக்கு ஒருவர் கொண்டு வந்து கொடுத்ததாக மனுதாரர் கூறியுள்ளார்.

இந்த வழக்கை யாரோ பின்புலத்தில் இருந்து இயக்கி வருகின்றனர். டைரியை கொடுத்தது யார் என்பதை பிரசாந்த் பூஷண் வெளியிட வேண்டும்" என வாதிட்டார்.

இந்நிலையில், டைரியை கொடுத்தவரின் பெயரை தெரிவிக்குமாறு பிரசாந்த் பூஷன் சீல் இடப்பட்ட உறையில் அளிக்குமாறு சுப்ரீம்கோர்ட்டில் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், சிபிஐ இயக்குநர் வீட்டு வரவேற்பறை டைரியை கொடுத்தவரின் பெயரை தெரிவித்தால் அந்த நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அதனால் அவரது பெயரை தெரிவிக்க முடியாது என பிரசாந்த் பூஷண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago