முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம்: அரசுக்கு நோட்டீஸ்

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.19 - ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய ஊழல் கண்காணிப்பு பிரிவின் தலைமை ஆணையர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இம்மனு, தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஊழல் கண்காணிப்பு ஆணையர் மற்றும் உறுப்பினர்கள் நியமனங்களின் போது வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம் தொடர்பாக அக்டோபர் 9-ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம் நிறுத்திவைக்கப்படுவதாக அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி உறுதியளித்தார். வழக்கு விசாரணை அக்டோபர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊழல் கண்காணிப்பு ஆணையச் சட்டம், 2013-ன் படி, தலைமை ஆணையர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க பிரதமர், உள்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழு விண்ணப்பங்கள் பெற்று தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். இத்துறையில் அனுபவம் மிக்கவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். ஒருமனதாக இப்பதவிகளை நிரப்ப வேண்டும். பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் இந்த நியமனம் கூடாது என்று சட்டத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்