முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் தலைமைச் செயலகம் திறப்பு: 10% ஊழியரிகளே வருகை

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,செப்.19

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், தலைமைச் செயலகம் கடந்த 11 நாட்களுக்குப் பிறகு நேற்றுமுதல் திறக்கப்பட்டது. ஆனால் முழு அளவில் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.

கடந்த வாரம் நடந்த ஜம்மு-காஷ்மீர் அமைச்சரவைக் கூட்டத்தில், 18-ம் தேதி முதல் தலைமைச் செயலக பணிகளை மீண்டும் துவக்குவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று தலைமைச் செயலகம் திறக்கப்பட்டது. இருப்பினும் ஊழியர்கள் வரத்து குறைவாகவே இருக்கிறது. 10 சதவீதத்திற்கும் குறைவான ஊழியர்களே அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.

தலைமைச் செயலகத்தை சுற்றி இருக்கும் பகுதிகளில் இன்னும் வெள்ளம் முழுமையாக வடியவில்லை.

7 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தில், தரைத்தளம் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டதால் அத்தளம் திறக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்