முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா கூட்டணி: சிவசேனாவுக்கு பாஜக கெடு?

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை. செப் 19 : மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து 12 மணி நேரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று சிவசேனாவுக்கு பாஜக விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலிலில் 25 ஆண்டுகால கூட்டணிக் கட்சிகளான பாஜகவும் சிவசேனாவும் இணைந்து போட்டியிடுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

பாஜகவைப் பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் தலா 135 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு

ஆனால் இதை உறுதியாக ஏற்கவே மாட்டோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துவிட்டார்

இதனால் இரு கட்சிகளிடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை முறிந்தது. இந்த நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்க பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நேற்று மும்பை வந்தார். அவர் பாஜக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்

இந்த ஆலோசனையின்போதுதான், கூட்டணிக்காக பாஜக தனது சுயமரியாதையை சமரசம் செய்து கொள்ளாது என்று அமித் ஷா கூறியிருந்தார். அத்துடன் கூட்டணி பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என்றும் அமித்ஷா உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்தே தற்போது கூட்டணி வேண்டுமா? வேண்டாமா என்று 12 மணி நேரத்தில் முடிவெடுக்க வேண்டும் என சிவசேனாவுக்கு பாரதிய ஜனதா கெடு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்